தொழில் அதிபர் வீட்டில் ரூ.9¼ லட்சம் நகை, பணம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

தொழில் அதிபர் வீட்டில் ரூ.9¼ லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2017-11-22 22:18 GMT

மும்பை,

தொழில் அதிபர் வீட்டில் ரூ.9¼ லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

நகை, பணம் கொள்ளை

மும்பை வில்லேபார்லே மேற்கில் பிரயாஸ் கோ–ஆபரேடிவ் ஹவுசிங் சொசைட்டி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவர் சம்பவத்தன்று குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்தார்.

பின்னர் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. சந்தேகம் அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அறையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அங்கிருந்த தங்கம், வைரம் மற்றும் பணம் காணாமல் போயிருந்தன.

போலீஸ் வலைவீச்சு

யாரோ மர்ம ஆசாமிகள் குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.9 கோடியே 35 லட்சம் ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த தொழில் அதிபர் சம்பவம் குறித்து ஜூகு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், கொள்ளையர்கள் கள்ளச்சாவி மூலம் வீட்டின் கதவை திறந்து கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்