ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
கடலூர்,
ரேஷன் கடைகளில் சர்க்கரை விலையை உயர்த்திய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி நேற்று கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடலூர் தெற்கு ஒன்றியமான கிழக்கு ராமாபுரம் ஆண்டியாபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரேஷன் கடை முன்பு தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறிய தாவது:-
தி.மு.க. ஆட்சியில் விலைவாசி குறைந்து இருந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி 2 மடங்கு அதிகரித்து விட்டது. இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட நீங்கள் 2 மடங்கு விலைவாசியால் பாதிக்கப்பட்டு வருகிறீர்கள்.
கருணாநிதி ஆட்சியில் ரேஷன் கடையில் அரிசி, உளுந்து, துவரம்பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஆட்சியில் ரேஷன் கடையில் அரிசியை மட்டுமே வழங்கி வருகிறார்கள்.
பாரதீய ஜனதாவின் எடுபிடி அரசாக தமிழக அரசு உள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் யாருக்கும் வேலை வழங்கவில்லை. இதனால் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் தர மறுக்கிறார்கள். பவுன் விலையை விட மணல் விலை அதிகரித்து விட்டது. இதனால் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் காசிராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கடலூர் நகர செயலாளர் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகம், ஒன்றிய துணை செயலாளர் ஞானசேகரன், அவைத்தலைவர் சாரங்கபாணி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மதியழகன், மாவட்ட பிரதிநிதி துரை, ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் ராமலிங்கம், பன்னீர்செல்வம் உள்பட தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.
கீரப்பாளையம் ஒன்றியம் வாழக்கொல்லையில் ரேஷன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜமுருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜெயக்குமார், செந்தில்ராயர், ராமதாஸ், ரமேஷ், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை கி.சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஆனந்தன், செல்வக்குமார், பாஸ்கர், அண்ணாதுரை, திருமூர்த்தி, பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வளையமாதேவி கிராமத்தில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜீ, குணசேகரன், மலர்விழி, சண்முகம், பன்னீர் செல்வம், செம்புலிங்கம், கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். அகர ஆலம்பாடி கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குமார், முத்துராமலிங்கம், சுந்தரபாண்டியன், செல்வம், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வீரமுடையாநத்தத்தில் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையிலும், அம்பாள்புரத்தில் அவைத்தலைவர் ராஜாராமன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் சோழத்தரம் ரேஷன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராஜவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் பத்மநாபன், ஒன்றிய பொருளாளர் நடராஜன், ஒன்றிய துணை செயலாளர் கண்ணப்பன், ராமலிங்கம், காளிமுத்து உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மந்தாரக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள ரேஷன் கடை முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் சதாசிவம் தலைமை தாங்கினார். தலைமை கழக பேச்சாளர் விக்ரமன், கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் திருமாவளவன், ஒன்றிய அவைத்தலைவர் சுந்தரபாண்டியன், முன்னாள் பொருளாளர் மனோகர், மாவட்ட பிரதிநிதி பட்டுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மகளிரணி மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
வடலூர் பஸ்நிலையம் அருகே சேராக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரேஷன் கடை முன்பு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குள்ளஞ்சாவடி அருகே உள்ள வழுதலம்பட்டு கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். கழக பேச்சாளர்கள் தானூர் சிவக்கொழுந்து, ராமு, கோவிந்தராஜ், அன்பழகன், சீனு, சீத்தா, ராமச்சந்திரன், செங்குட்டுவன், காசிலிங்கம், ராஜா,பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுப்பேட்டையில் போலீஸ் நிலையம் எதிரே உள்ள ரேஷன் கடை முன்பு நகர செயலாளர் சுந்தரவடிவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைபோன்று அங்குசெட்டிப்பாளையம், ஒறையூர், பைத்தாம்பாடி ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அண்ணாகிராமம் ஒன்றிய தி.மு.க. சார்பில் கீழ்கவரப்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி புருஷோத்தமன், ஒன்றிய துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணை அமைப்பாளர் பக்கிரி, தேன்மொழி, யேசுதாஸ், இளைஞரணி அமைப்பாளர் அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அண்ணாகிராமம் ஒன்றிய பகுதியில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பம் நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் நெல்லிக்குப்பம் பங்களா தெருவில் உள்ள ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாருதி ராதாகிருஷ்ணன், ஷேக்மொய்தீன், பார்த்தசாரதி, வேலு, ஜெயசீலன், ராமு, சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிதம்பரத்தில் லால்கான்தெருவில் உள்ள ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. மருதூர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர், ஜேம்ஸ் விஜயராகவன், நகர அவைத்தலைவர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, நகர துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், பன்னீர்செல்வம், நகர பொருளாளர் ஜாபர்அலி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சத்தியநாராயணன், பொறியாளர் அணி அமைப்பாளர் அப்புசந்திரசேகர், அமைப்பாளர் முஜிபூர்ரகுமான், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ராஜன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் மணி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.