தி.மு.க. சார்பில் ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் 1,094 இடங்களில் நடந்தது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் 1,094 ரேஷன் கடைகள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-11-22 23:00 GMT
கிருஷ்ணகிரி,

ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டத்தில் உள்ள 1,094 ரேஷன் கடைகள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் 608 ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையில் உள்ள கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார்.

மாநில மகளிர் அணி தலைவர் காஞ்சனா கமலநாதன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை கிழக்கு மாவட்ட செயலாளர் சுகவனம் தொடங்கி வைத்து, பேசினார். இதில், காங்கிரஸ் நகர செயலாளர் வின்சென்ட், முன்னாள் கவுன்சிலர் முபாரக், எஸ்.சி., எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் ஆறுமுகசுப்பிரமணி, முன்னாள் நகராட்சி தலைவர் பரிதா நவாப், முன்னாள் கவுன்சிலர் அஸ்லாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி ஒன்றிய தி.மு.க. சார்பில் கட்டிகானப்பள்ளி ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அமீன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வெங்கடப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

போச்சம்பள்ளியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்தூரில் தி.மு.க தலைமை செயற்குழ உறுப்பினர் பொன்.குணசேகரன் தலைமையிலும், நாகரசம்பட்டியில் தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை தலைமையிலும், ஊத்தங்கரையில் நகர செயலாளர் பாபு சிவக்குமார் தலைமையிலும், களர்பதி கிராமத்தில் மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ் தலைமையிலும், ராயக்கோட்டையில் ஒன்றிய செயலாளர் அரியப்பன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காவேரிப்பட்டணத்தில் பேரூர் செயலாளர் பாபு, பர்கூர் ஒன்றியம் காரகுப்பம் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசு தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் உள்ள 486 ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தேன்கனிக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் தெருவில் உள்ள ரேஷன்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். இதில் பேரூர் செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேப்பனப்பள்ளி ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் முருகன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசினார். ஒன்றிய செயலாளர் ரகுநாத் முன்னிலை வகித்தார். இதில், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஓசூர் ஏரித்தெருவில் உள்ள ரேஷன் கடை முன்பு நகர தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சீனிவாசன், தனலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், முன்னாள் நகர செயலாளர்கள் அக்ரோ நாகராஜ், குருசாமி, நகர துணை செயலாளர் திம்மராஜ், பொருளாளர் சென்னீரப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்