மதுரை- பொள்ளாச்சி பாசஞ்சர் ரெயில் பழனியோடு நிறுத்தம், பயணிகள் தவிப்பு
மதுரை- பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில் பழனியோடு நிறுத்தப்படுவதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.;
பழனி,
பாலக்காடு-பழனி-மதுரை வழித்தடத்தில் உள்ள மீட்டர் கேஜ் ரெயில் பாதையில் இருந்து அகல ரெயில் பாதை பணி தொடங்கப்பட்ட பின்பு பாலக்காட்டில் இருந்து பழனி-திண்டுக்கல் வழியாக சென்னை, மதுரை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு இயக்கப்பட்ட ரெயில்கள் நிறுத்தப்பட்டது. பின்னர் அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதும் மதுரையில் இருந்து திண்டுக்கல், பழனி வழியாக பொள்ளாச்சி வரை பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை-பழனி அதிவிரைவு ரெயில் இயக்கப்பட்டது.
பின்னர் பாலக்காடு-திருச்செந்தூர், மதுரை-திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் மதுரையில் இருந்து தினசரி காலை 7.45 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரெயில் திண்டுக்கல், பழனி வழியாக பொள்ளாச்சிக்கு சென்றுகொண்டிருந்தது. இந்த ரெயில் கடந்த சில மாதங்களாக பழனி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இது குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, டிரைவர்கள் தட்டுப்பாடு காரணமாக அந்த ரெயில் பழனியுடன் நிறுத்தப்படுவதாக தெரிவித்தனர்.
ஆனால் சென்னையில் இருந்து பழனி வரை இயக் கப்பட்டு வந்த அதிவிரைவு ரெயில் தற்போது பாலக்காடு வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. இந்த ரெயிலை இயக்க டிரைவர்கள் இருக்கும் போது, மதுரை-பொள்ளாச்சி இடையே இயக்கப்பட்ட ரெயிலுக்கு மட்டும் டிரைவர்கள் தட்டுப்பாடு என கூறி ரெயிவே நிர்வாகம் புறக்கணிக்கிறதா? என்று பயணிகள் புலம்பி வருகின்றனர்.இது குறித்து மேலும் அவர்கள் கூறுகையில், மதுரையில் இருந்து பொள்ளாச்சி வரை இயக்கப்பட்டு வந்த ரெயில் பழனியுடன் நிறுத்தப்பட்டதால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும் கேரளாவில் இருந்து பழனி, மதுரைக்கு செல்லும் பக்தர்களும் அவதியடைந்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க மதுரை, திண்டுக்கல் ரெயில் நிலையங்களில் பொள்ளாச்சி வரை பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. பழனியுடன் ரெயில் நிறுத்தப்படும் என்ற விவரம் எங்களுக்கு தெரியவில்லை என்றாலும் ரெயில் நிலைய ஊழியர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களும் நாங்கள் கேட்கும் ஊருக்கு பயணச்சீட்டு கொடுத்துவிடுகின்றனர்.
பின்னர் ரெயில் பழனி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதும் தான் எங்களுக்கே விவரம் தெரியவருகிறது. பின்னர் வேறு வழியின்றி பழனி ரெயில் நிலைய அதிகாரிகளிடம் புகார் மட்டும் தெரிவித்துவிட்டு பஸ்களில் பொள்ளாச்சிக்கு செல்கிறோம். எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பழனி பாசஞ்சர் ரெயிலை மீண்டும் பொள்ளாச்சி வரை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.