சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரேஷன்கடைகள் முன்பு தி.மு.க. ஆர்ப்பாட்டம்
சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 194 ரேஷன்கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராமநாதபுரம்,
தமிழக அரசு ரேஷன் கடைகளில் சர்க்கரை விலையை உயர்த்தி உள்ளதை கண்டித்தும், பொது வினியோக திட்டத்தில் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான மானியங்கள் ரத்து செய்யும் போக்கை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட கோரியும் தமிழகம் முழுவதும் ரேஷன்கடைகள் முன்பு தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன்கடைகள் முன்பும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அருகே உள்ள லாந்தை கிராமத்தில் உள்ள ரேஷன்கடை முன்பு மாவட்ட தி.மு.க செயலாளர் சுப.த.திவாகரன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் துணை செயலாளர் அகமது தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், நகர் செயலாளர் கார்மேகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ரேஷன்கடையில் முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.
கமுதியில் வடக்கு ஒன்றிய செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் , சந்தைபேட்டையில் நகர் தி.மு.க. செயலாளர் எம்.எம். அம்பலம், பெருநாழியில் கமுதி தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தூர்பாண்டி,ஓகரிசல் குளத்தில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பாண்டி, அபிராமத்தில் தி.மு.க. நகர் தலைவர் ஜாகிர்உசேன் ஆகியோர் தலைமையில் ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாடானையில் ரேஷன் கடை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அறிவழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் கார்த்திகேயேன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் பால முருகன், நகர் செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கடம்பாகுடியில் முன்னாள் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் கபீப் முகமது, ஒன்றிய பிரதிநிதி கதிரவன், தொண்டரணி அமைப்பாளர் மார்க்கண்டன், செயலாளர் போஸ், அச்சங்குடி ஊராட்சி செயலாளர் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொண்டியில் நகர் செயலாளர் ஜின்னா தலைமையில் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் பாலசுப்பிரமணியன், நகர் காங்கிரஸ் தலைவர் காத்தராஜா, த.மு.மு.க. மாவட்ட தலைவர் சாதிக்பாட்சா, மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் பலீல் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டி கடற்கரை சாலையில் உள்ள ரேஷன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பிரதிநிதி சவுந்திர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் நகர் செயலாளர் இஸ்மத் நானா உள்பட பலர் கலந்து கொண்டனர். வெள்ளையபுரத்தில் திருவாடானை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பதனக்குடி ரவி தலைமையில் மாவட்ட பிரதிநிதி பரக்கத்தலி, முன்னாள் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புலியூரில் மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன் தலைமையிலும், ஆண்டாவூரணி, பாகனூர், என்.மங்கலம், சிறுகம்பையூர், மங்கலக்குடி உள்பட பல்வேறு இடங்களிலும் ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பூபதிமணி தலைமையில் தேரிருவேலி ரேஷன்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல மேலக்கொடுமலூர், கீழத்தூவல் ஆகிய ரேஷன்கடைகள் முன்பு முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் கருப்பையா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அலங்கானூர் ரேஷன்கடை முன்பு பொசுக்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் லட்சுமணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலாடியில் மாவட்ட தி.மு.க. விவசாய அணி துணை அமைப்பாளர் குருசாமி தலைமையில் ஒன்றிய அவை தலைவர் பழனிச்சாமி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கருங்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் தனசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தில் 194 ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க. சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.