தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம்
தமிழக அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. ஆர்.பாலசுப்பிரமணி கூறினார்.;
ஆம்பூர்,
கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான ஆர்.பாலசுப்பிரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது கட்சி கட்டுக்கோப்பாக இருந்தது. ஆனால் தற்போதைய நிலைமை தலைகீழாக உள்ளது. அமைச்சர்கள் எவரும், எவருக்கும் கட்டுப்படுவதில்லை. அவர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர். தமிழக முதல்–அமைச்சரை கூட அமைச்சர்கள் மதிப்பது கிடையாது. அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்கட்சியான தி.மு.க. ஒப்பந்தரார்களுக்குதான் திட்டப்பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழக அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம்.இவ்வாறு அவர் பேசினார்.