வாலாஜாபாத் அருகே ஏரியில் மூழ்கி பலியான வாலிபரின் உடல் மீட்பு

வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிதம்பரம்.

Update: 2017-11-21 22:45 GMT

வாலாஜாபாத்,

வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிதம்பரம் (வயது 25). இவர் வாலாஜாபாத் சேர்காடு பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கிக்கொண்டு ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வாலாஜாபாத் அருகே நத்தாநல்லூர் கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றார். ஏரியில் நீர் காகம் முட்டை இருப்பதை கண்டு அதை எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏரியில் முழ்கினார்.

இது குறித்த தகவலின் பேரில் வாலாஜாபாத் போலீசார் மற்றும் காஞ்சீபுரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஏரியில் மூழ்கி பலியான சிதம்பரத்தின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று ஏரியில் கொடிகளுககு இடையில் சிக்கியிருந்த சிதம்பரத்தின் உடல் பெரும் சிரமத்திற்கு பின் மீட்கப்பட்டது.பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்