எச்சில் உமிழ்ந்து அசிங்கப்படுத்துவதை தடுக்க குர்லா சுரங்கபாதையில் கண்காணிப்பு கேமரா

எச்சில் உமிழ்ந்து அசிங்கப்படுத்துவதை தடுக்க குர்லா சுரங்கப்பாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரி கூறினார்.

Update: 2017-11-21 22:31 GMT

மும்பை,

எச்சில் உமிழ்ந்து அசிங்கப்படுத்துவதை தடுக்க குர்லா சுரங்கப்பாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரி கூறினார்.

சுரங்கபாதை

மும்பை குர்லா மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்கும் வகையில் ரெயில் நிலைய பகுதியில் அமைக்கப்பட்ட சுரங்கபாதை 14 ஆண்டுகால தாமதத்திற்கு பிறகு அண்மையில் திறக்கப்பட்டது. அந்த சுரங்கபாதையை தினசரி ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த வழியாக செல்லும் போதைப்பாக்கு மெல்லும் பழக்கம் உள்ளவர்கள் சுரங்கபாதை சுவர்களில் எச்சிலை உமிழ்ந்து அசிங்கப்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் அனில் கல்கலி என்பவர் மும்பை மாநகராட்சி கமி‌ஷனர் அஜாய் மேத்தாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கண்காணிப்பு கேமரா

இதையடுத்து குர்லா சுரங்கப்பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. இதுபற்றி குர்லா எல் வார்டு உதவி கமி‌ஷனர் அஜித்குமார் அம்பி கூறுகையில், குர்லா சுரங்கபாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் சுரங்கபாதையை எச்சில் உமிழ்ந்து அசிங்கப்படுத்துபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். இதுதவிர பெண்களுக்கு எதிராக குற்றங்களை தடுக்கவும் உதவிகரமாக இருக்கும் என்றார்.

மேலும் செய்திகள்