திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலி உயர்வு கேட்டு சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலி உயர்வு கேட்டு சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருச்சி,
திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்காக வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் காய்கறிகள், மளிகை பொருட்கள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வருவது வழக்கம். அவற்றை லாரிகளில் இருந்து சுமைப்பணி தொழிலாளர்கள் இறக்குவார்கள். இதே போன்று காந்தி மார்க்கெட்டில் உள்ள லாரி புக்கிங் பார்சல் அலுவலகங்கள் மூலம் கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறுமாவட்டங்களுக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய மூட்டைகள், பழங்கள் உள்ளிட்டவை அடங்கிய அட்டை பெட்டிகளை லாரிகளில் ஏற்றும் பணியில் 250-க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு லாரி புக்கிங் பார்சல் அலுவலக உரிமையாளர்கள் பொருட்களுக்கு ஏற்றவாறு கூலி வழங்குவார்கள். 2 வருடத்திற்கு ஒரு முறை தொழிலாளர்களுக்கு, உரிமையாளர்கள் கூலி உயர்வு வழங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சுமைப்பணி தொழிலாளர்கள் 50 சதவீதம் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
வேலை நிறுத்த போராட்டம்
இது தொடர்பாக லாரி புக்கிங் பார்சல் அலுவலகத்தில் உரிமையாளர்களுக்கும், சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கங்களான சி.ஐ.டி.யூ. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பார்வர்டு பிளாக் கட்சிகளின் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் நேற்று அதிகாலை வெளியூர்களில் இருந்து காந்தி மார்க்கெட்டுக்கு வந்த காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை இறக்காமலும், வெளிமாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டிய பொருட்களை லாரிகளில் ஏற்ற மறுத்தும் சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் லாரிகளில் சரக்குகள் ஏற்றப்படாமல் லாரி புக்கிங் பார்சல் அலுவலகத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்தன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக காந்தி மார்க்கெட் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து நேற்று மாலை மீண்டும் லாரி புக்கிங் பார்சல் அலுவலக உரிமையாளர்களும், சுமைப்பணி தொழிலாளர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது தொழிலாளர்கள் தரப்பு நிர்வாகிகள் 30 சதவீதம் கூலி உயர்வு அளித்தால் போதும் என்றனர். ஆனால் உரிமையாளர்கள் 15 சதவீதம் வரை தான் கூலி உயர்வு அளிக்கப்படும் என்றனர். இதுகுறித்து தகவலறிந்த கோட்டை போலீஸ் சரக உதவி கமிஷனர் பெரியய்யா செல்போனில் உரிமையாளர்கள் மற்றும் சுமைப்பணி தொழிலாளர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது தொழிலாளர்கள் கூலி உயர்வு குறித்து தொழிலாளர்கள் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று(புதன்கிழமை) அல்லது நாளை (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு இரவு 7 மணியளவில் மீண்டும் வேலைக்கு திரும்பினர்.