புதிதாக திறக்கப்பட்ட எரிவாயு தகனமேடை பழுது சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை
அறந்தாங்கி நகரில் புதிதாக திறக்கப்பட்ட எரிவாயு தகன மேடை பழுதானது. இதனை உடனடியாக சரிசெய்ய அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
அறந்தாங்கி,
அறந்தாங்கி நகரில் புதுக்கோட்டை சாலை, பட்டுக்கோட்டை சாலை, பேரா வூரணி சாலை, எல்.என்.புரம் ஆகிய 4 இடங்களில் இறந்தவர்களை எரியூட்டும் மயானங்கள் இருந்தன. நாளடைவில் இந்த மயானங்களின் அருகில் குடியிருப்புகள் உருவானதால், சடலங்களை திறந்தவெளியில் எரியூட்டும்போது சுகாதாரக் கேடு ஏற்பட்டது. இதையடுத்து அறந்தாங்கி நகராட்சியால் பட்டுக்கோட்டை சாலை மயானத்தில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் நவீன எரிவாயு தகன மேடை பணிகள் நிறைவுற்று, கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி தகன மேடை திறக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த எரிவாயு தகனமேடையில் இதுவரை 42 சடலங்கள் மட்டுமே எரியூட்டப்பட்டுள்ளன. 42 சடலங்கள் எரியூட்டப்பட்டபோதிலும், தகன மேடையில் பொருத்தப்பட்டிருந்த பல்வேறு உபகரணங்கள் வேலை செய்யவில்லை.
எரியூட்டுவதில் சிரமம்
இந்த நிலையில் தற்போது எரியூட்டும் சேம்பரில் இருந்து புகை வெளியே செல்லவில்லை. இதனால் சடலத்தை எரியூட்டும்போது புகை வெளியே செல்லாமல் தகனமேடை அறை உள்ளே செல்வதால் அப்பகுதி கடும் வெப்பமாகவும், புகை நிரம்புவதாலும் அங்கு பணிபுரிபவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற் பட்டது.
இதனால் பணியாளர்கள் சடலங்களை எரியூட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து எரிவாயு தகன மேடையை பராமரித்து வரும் அமைப்பினர் அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்தினரிடம் புகார் செய்தனர் . புகாரின் பேரில் நகராட்சி நிர்வாகம் எரிவாயு தகன மேடையில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் வரை அதை மூட உத்தரவிட்டது. இதனால் தற்போது எரிவாயு தகனமேடை மூடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
அறந்தாங்கியில் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன தகன மேடை பூட்டப்பட்டதால் தற்போது பழையபடி மீண்டும் திறந்தவெளியில் இறந்தவர்களை எரியூட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, எரிவாயு தகன மேடையில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்து மீண்டும் சடலங்களை எரியூட்ட தகன மேடையை திறக்க வேண்டும் என்பதே அறந்தாங்கி நகர பொதுமக்களின் கோரிக்கையாகும்.