தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை
தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டெங்கு தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்ற கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
வேட்டவலம்,
வேட்டவலத்தை அடுத்த சின்னஓலைப்பாடி கிராமத்தில் டெங்கு நோய் தடுப்பு பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், வீடு வீடாக சென்று தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு உள்ள தொட்டி, பாத்திரங்களில் கொசு புழுக்கள் உள்ளதா? சுகாதார நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு பயன் அளிக்கிறதா? என்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கலெக்டரிடம் பொதுமக்கள், “தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பழுதடைந்த சிறிய குடிநீர் தொட்டியை சரி செய்து தரவேண்டும். கால்வாய்களை சுத்தம் செய்து மருந்து தெளிக்க வேண்டும். தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்து தர வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தினர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார்.
மேலும் கொசு புழுக்கள் மற்றும் டெங்கு கொசு எப்படி உற்பத்தியாகிறது என்பது குறித்து ஒவ்வொரு பகுதியாக சென்று தெளிவாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எடுத்து கூறி விளக்கினார்.
பின்னர் அவர் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு குழந்தைகளின் கல்வித்தரத்தை ஆய்வு செய்து ஒழுக்கத்தையும் கல்வி தரத்தையும் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அங்கன்வாடி பணியாளர் சுகந்திக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து ஆவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். அங்கு சிகிச்சைபெறும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த அவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் குடியிருப்புக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்து வழங்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதில் கீழ்பென்னாத்தூர் தாசில்தார் சுகுணா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பா.மகாதேவன், ரபியுல்லா, மண்டல துணை தாசில்தார் முருகன், வேட்டவலம் வருவாய் ஆய்வாளர் பர்வீன்பானு, வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்- இன்ஸ்பெக்டர்கள் ராமநாதன், வீரமணி, வட்டார மருத்துவ அலுவலர் சரவணன், ஆவூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தமிழ்ச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.