விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பலத்த மழை: கடையின் மேற்கூரை இடிந்து விழுந்தது

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பலத்த மழை: கடையின் மேற்கூரை இடிந்து விழுந்தது

Update: 2017-11-21 22:30 GMT
விக்கிரமசிங்கபுரம்,

விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் பஞ்சாயத்து வராகபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது 61). இவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விக்கிரமசிங்கபுரம் பகுதியில் இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வழக்கம் போல் அழகம்மாள் கடையை அடைத்துவிட்டு தனது அறைக்கு சென்றார். அப்போது அந்த கடையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

மேலும் செய்திகள்