குறைதீர்க்கும் கூட்டத்தில் மாணவ-மாணவிகளுடன் மனு கொடுத்த கிராம மக்கள்
ஆசிரியை இடமாற்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் மாணவ, மாணவிகளுடன் வந்து கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மனு அளிக்க கடமலை-மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கோம்பைத்தொழு அருகில் உள்ள மஞ்சனூத்து கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வந்தனர். அவர்கள், தங்கள் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் சுமார் 25 பேரை அழைத்து வந்தனர்.
அவர்கள் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத் திடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
மஞ்சனூத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இதில் இடைநிலை ஆசிரியை ஒருவர் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். மலைக்கிராமமான எங்கள் ஊரில் உள்ள பள்ளியில், தற்போது ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகிறார். இதனால் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
எனவே, இடைநிலை ஆசிரியையை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து எங்கள் பள்ளியிலேயே தொடர்ந்து பணிபுரிய உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே எங்கள் குழந்தைகளின் நலன் கருதி நல்ல தீர்வை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மேலும் அந்த மக்கள் கூறுகையில், ‘எங்கள் ஊரில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு நல்ல கட்டிடம் இல்லை. மண் சுவர் கட்டிடத்தில் தான் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. எங்கள் ஊருக்கு வருவதற்கு சாலை வசதி கிடையாது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதை வழியாக நடந்து சென்று தான் பஸ் பயணம் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. எங்கள் ஊரில் இருந்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு படிக்கச் செல்லும் மாணவ, மாணவிகளும் நடந்தே சென்று வருகின்றனர். பள்ளிக்கூடத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு வனத்துறையினர் அனுமதி அளிப்பது இல்லை. எனவே புதிய கட்டிடம் கட்ட வேண்டும்’ என்றனர்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
அதேபோன்று இந்த கூட்டத்தில், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் ஜெய்முருகேஷ் அளித்த மனுவில், ‘தேனி-மதுரை சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. பங்களாமேடு முதல் அரண்மனைப்புதூர் விலக்கு வரை சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
தேனி அருகே உள்ள அன்னஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட அனுகிரஹா நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘அனுகிரஹா நகரில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றிப் போனதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்தோ அல்லது அன்னஞ்சி விலக்கு வரை வரும் வைகை அணையின் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்தோ தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், இந்த மனுக்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.