அ.தி.மு.க. எம்.பி. பெயரில் போலி ‘லெட்டர்பேடு’ தயாரித்த என்ஜினீயர் கைது
ரெயிலில் அவசர ஒதுக்கீடு பிரிவில் பயணம் செய்ய அ.தி.மு.க. எம்.பி. பெயரில் போலி ‘லெட்டர்பேடு’ தயாரித்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
ரெயிலில் பயணம் செய்ய அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் அவசர ஒதுக்கீடு (எமர்ஜென்சி கோட்டா) பிரிவில் செல்லும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இவ்வாறு திருச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.பி. யான குமாரின் பெயரை பயன்படுத்தி சிலர் அடிக்கடி ரெயிலில் அவசர ஒதுக்கீடு பிரிவில் பயணம் செய்வதாக சென்னை ரெயில்வே லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
இந்த புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகள் விசாரித்தனர். மேலும் இந்த புகார்கள் குறித்து குமார் எம்.பி.யை போலீஸ் அதிகாரிகள் தொடர்பு கொண்டு விசாரித்ததில் அவர் தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் தனது பெயரில் போலியாக ‘லெட்டர்பேடு’ தயாரித்து அதன் மூலம் ரெயிலில் பயணம் செய்து வருவதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படியும் கூறினார்.
இதன் அடிப்படையில் ரெயில்வே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதமன் தலைமையிலான போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெயில்களில் அவசர ஒதுக்கீடு முறையில் பயணம் செய்பவர்கள் குறித்து விசாரித்து வந்தனர்.
அப்போது சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவசர ஒதுக்கீடு பிரிவில் பயணச்சீட்டு எடுத்து பயணம் செய்த பயணிகளிடம் விசாரித்ததில் தாம்பரம் பகுதியை சேர்ந்த நசிருதீன் என்பவர் குமார் எம்.பி.யின் பெயரை பயன்படுத்தி அவசர ஒதுக்கீட்டில் பயணச்சீட்டு எடுத்து பயணம் செய்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரை பிடித்து விழுப்புரம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒப்படைத்தனர். அதன் பிறகு நசிருதீனிடம் விழுப்புரம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில், தனது நண்பரான சென்னை சோழிங்கநல்லூர் எம்.ஜி.ஆர். தெருவில் வசித்து வரும் குமார் மகன் செந்தில் (வயது 29) என்பவர் தனக்கு பயணச்சீட்டு எடுத்து கொடுத்ததாக கூறினார்.இதையடுத்து இன்ஸ்பெக்டர் வஜ்ரவேல், சப்-இன்ஸ்பெக்டர் ஜூலியட் ராஜ்குமார், போலீஸ்காரர் லட்சுமிகாந்தன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று சென்னை சோழிங்கநல்லூருக்கு விரைந்து சென்று செந்திலை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை விழுப்புரம் அழைத்து வந்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தியதில், பி.இ. படித்து முடித்துள்ள செந்திலுக்கு சொந்த ஊர் புதுக்கோட்டையாகும். இவர் சென்னை சோழிங்கநல்லூரில் நண்பர்களுடன் தங்கியிருந்து அங்குள்ள தனியார் கம்பெனி ஒன்றில் என்ஜினீயராக பணியாற்றி வருவது தெரிந்தது.
மேலும் விசாரணையில் செந்திலின் தந்தை குமார், அ.தி.மு.க. பிரமுகராக உள்ளார். அதை பயன்படுத்தி செந்தில், குமார் எம்.பி.யின் பெயரில் போலி ‘லெட்டர்பேடு’ தயாரித்து அதனை ‘ஜெராக்ஸ்’ எடுத்து தனது நண்பர்கள் பலருக்கு கொடுத்து அதன் மூலம் பலமுறை ரெயிலில் அவசர ஒதுக்கீடு பிரிவில் பயணம் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து செந்திலை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த போலியான ‘லெட்டர்பேடு’ நகல்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.