பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில், உடலில் மண்எண்ணெயை ஊற்றி அடுத்தடுத்து 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்,
கந்துவட்டி கொடுமையால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கணவன்-மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் தீக்குளித்து இறந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள கலெக்டர் அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்தவகையில், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிற நேரத்தில், கலெக்டர் அலுவலக பிரதான நுழைவுவாயில் மற்றும் கூட்டம் நடக்கிற கட்டிடத்தின் நுழைவுவாயில் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பொதுமக்களை சோதனை செய்த பிறகே கலெக்டரை சந்திக்க அனுப்புகின்றனர்.
இந்நிலையில் நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பொதுமக்கள் பலர் வந்து மனு கொடுத்து விட்டு சென்றனர். அப்போது பெரம்பலூர் கலெக்டர் அலுவலக முன்புற வளாகத்தில் நின்று கொண்டிருந்த குன்னம் வட்டம் நன்னை கிராமத்தை சேர்ந்த தங்கராசு மனைவி நல்லம்மாள் (வயது 65) திடீரென தண்ணீர் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெயை தனது உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அவர் கலெக்டருக்கு எதிராக கோஷம் எழுப்பியபடியே சில குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் கணவர் இல்லாமல் தனியாக வசிக்கும் தனது உயிருக்கு சில நபர்களால் ஆபத்து வர இருப்பதாகவும் கூறினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினாம்பாள், சப்-இன்ஸ்பெக்டர் மாலதி உள்பட போலீசார் ஓடி வந்து மூதாட்டியின் கையில் இருந்த பாட்டிலை பிடுங்கி எறிந்தனர். அவர் கூச்சலிட்டபடியே அங்கும் இங்கும் ஓடினார்.
போலீசாரின் விசாரணையில், நன்னை கிராமத்தில் உள்ள நல்ல தண்ணீர்குளம், ராமக்குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக பல ஆண்டுகளாக தனி ஆளாக நல்லம்மாள் கோர்ட்டு வரை சென்று போராடி வருவது தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசாரிடம் நல்லம்மாள் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற போராடி வரும் எனக்கு பல்வேறு வகையில் இடையூறு உள்ளது. எனினும் அதனை பொருட்படுத்தாமல் உயர்அதிகாரிகள், முதல்-அமைச்சரின் தனிப் பிரிவு உள்ளிட்டவற்றிற்கு மனு கொடுத்து வருகிறேன். இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவிட்டும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாலும், எனக்கு மிரட்டல் வருவதாலும் இந்த முடிவு எடுப்பதை தவிர வேறுவழி தெரியவில்லை. எனவே விவசாயத்தின் முக்கியத்துவதை உணர்ந்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
இதற்கிடையே மூதாட்டி மண்எண்ணெயை ஊற்றிய அடுத்த சில நிமிடங்களில் கலெக்டர் வளாகத்தில் நின்று கொண்டிருந்த குன்னம் வட்டம் டி.கீரனூர் நோவா நகரை சேர்ந்த சுரேஷ் மனைவி அனிதாவும் (30), தண்ணீர் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
மூதாட்டியை ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்த போலீசார் உடனடியாக ஓடி வந்து அனிதாவையும் பிடித்தனர். அவர் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெயை கைப்பற்றினார்கள். அப்போது அனிதா மனுவை கையில் வைத்துக்கொண்டு கதறி அழுதார்.
மேலும் போலீசார் விசாரணை நடத்தியபோது அனிதா கூறியதாவது:-
“எனது கணவர் சென்னையிலுள்ள ஓட்டலில் வேலை செய்கிறார். 2 ஆண் குழந்தைகளுடன் நான் தனியாக வசித்து வருகிறேன். எங்கள் பகுதியில் வீடியோ கடை நடத்தி வரும் வெற்றிவேலிடம் நட்பின் அடிப்படையில் பழக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக என் வீட்டிற்கு வருவார். ஒருநாள் திடீரென்று நீ குளிக்கும் போது உனக்கு தெரியாமல் நிர்வாணமாக வீடியோ எடுத்துவிட்டேன் என என்னிடம் வெற்றிவேல் தெரிவித்தார். மேலும் அந்த ஆபாச வீடியோவை வைத்து மிரட்டி எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
அதன்பிறகு அடிக்கடி என் வீட்டிற்கு வந்த வெற்றிவேல் என்னிடம் நகை-பணத்தை மிரட்டி வாங்கி சென்றார். இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். மேலும் வீடியோவை வெளியில் காண்பித்து மானத்திற்கு பங்கம் ஏற்படுத்தி விடுவதாக கூறினார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நான் பலமுறை தற்கொலைக்கும் முயன்றேன். என்னைப்போல் வேறு யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், வெற்றிவேலின் சுயரூபத்தை வெளிச்சம்போட்டு காட்ட வேண்டும் என்பதற்காகவும் தான் கலெக்டர் அலுவலகம் வந்தேன். என்னுடைய 16 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை அவரிடம் இருந்து மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நல்லம்மாள், அனிதா ஆகிய 2 பேரையும் சமாதானம் செய்த போலீசார் அவர்கள் மீது தண்ணீரை தெளித்து துணி மூலம் மண்எண்ணெயை துடைத்து எடுத்தனர். தொடர்ந்து அவர்களை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று உரிய அறிவுரைகளை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் மற்றும் மூதாட்டி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.