கூட்டுறவு சங்க செயலாளர் விஷம் குடித்து தற்கொலை
ஆத்தூரில் பரிதாபம்: கூட்டுறவு சங்க செயலாளர் விஷம் குடித்து தற்கொலை
ஆத்தூர்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பஸ் நிலையம் பின்புறத்தில் ஆவின் பால் நுகர்வோர் கூட்டுறவு விற்பனை சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தின் செயலாளராக பணியாற்றி வந்தவர் ராஜா (வயது 52). இவருடைய மனைவி பூங்கொடி. இவர்களுக்கு விமல்ராஜ், விக்ரம் என்ற 2 மகன்களும், விஷ்ணுபிரியா என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஆத்தூர் லீபஜார் மந்தைவெளியில் உள்ள தனது வீட்டில் ராஜா எலிமருந்து (விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜா மாலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் குடும்பசூழல் மற்றும் மனஉளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.