வங்கி கடனை வசூலிக்க அடியாட்கள் அனுப்புவதை கண்டித்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
வங்கி கடனை வசூலிக்க அடியாட்கள் அனுப்புவதை கண்டித்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்,
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு போந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். விவசாயி. இவர் வங்கியில் கடன் பெற்று டிராக்டர் வாங்கி இருந்தார். அதற்கான தவணை தொகையை கட்ட முடியவில்லை. இதை தொடர்ந்து வங்கி நிர்வாகம் அடியாட்கள் மூலம் டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதனால் வேதனை அடைந்த ஞானசேகரன் இறந்தார்.
நீதிமன்ற உத்தரவை மீறி வங்கி அதிகாரிகள் கடனை வசூலிக்க அடியாட்களை அனுப்புவதை கண்டித்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன் தலைமை தாங்கினார். திருவாரூர் மாவட்ட தலைவர் அன்பரசன், விவசாய சங்க நிர்வாகிகள் பார்த்தசாரதி, பழனிராசு, சின்னதுரை, சிவராம கிருஷ்ணன், பிரிதிவிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுசெயலாளர் அயனாபுரம் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் டிராக்டர் கடன் வசூல் செய்ய வங்கி, அடியாட்களை அனுப்பி தாக்கியதில் விவசாயி ஞானசேகரன் உயிரிழந்துள்ளார். நீதிமன்ற ஆணையை மதிக்காமல் அடியாட்களை கொண்டு கடன் வசூல் என்ற பெயரில் விவசாயியை தாக்கி உயிரிழக்க செய்த வங்கி அதிகாரிகள் மற்றும் தாக்குதல் நடத்திய அடியாட்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு தக்க இழப்பீடு வழங்க வேண்டும். இத்தகைய நடைமுறைகள் இனியும் நடக்க கூடாது என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் டெல்டா சமவெளி விவசாயிகள் சங்க தலைவர் பழனிராசு, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன்சேவியர்ராஜ், தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு, தமிழ்தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் வைகறை, செயற்குழு உறுப்பினர் பழ.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் பழ.ஜெகதீசன் நன்றி கூறினார்.