மோட்டார் சைக்கிள்களில் வேகமாக சென்றதை தட்டிக் கேட்டதால் ஆத்திரம்: வெடிகுண்டு வீச்சு
புதுவையில் மோட்டார் சைக்கிள்களில் வேகமாக சென்றதை தட்டிக் கேட்டவர் மீது ஆத்திரமடைந்து நாட்டு வெடிகுண்டை வீசினர். இதில் தெருவில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமிக்கு காயம் ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுவை மேட்டுப்பாளையம் சொக்கநாதன்பேட் தெற்கு அணைக்கரை வீதியில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வேகமாகச் சென்றனர்.
இதனை நேரில் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரியில் உதவியாளராக பணிபுரியும் பெருமாள் (வயது33) என்பவர் மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்களிடம் ஏன் வேகமாக செல்கிறீர்கள் எனத் தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 வாலிபர்களும் பெருமாளை மிரட்டி விட்டுச் சென்றனர்.
இந்தநிலையில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் ஒரு ஆட்டோ மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களில் அணைக்கரை வீதிக்கு ஒரு மர்ம கும்பல் வந்தது. அந்த பகுதியின் நின்று கொண்டிருந்தவரை ஒருவரை கத்தி முனையில் பெருமாள் வீடு எங்கே இருக்கிறது? என மிரட்டி கேட்டனர். இதனால் பயந்துபோன அந்த நபர் எனக்கு தெரியவில்லை என கூறியதாக தெரிகிறது.
அதேசமயத்தில் அங்கு வந்த பெருமாளை பார்த்ததும் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை தாக்க முயன்றனர். ஆனால் அவர் தப்பி ஓடினார். இருந்தபோதிலும் துரத்திச் சென்று அவரை தாக்கினர். அவர்களது பிடியில் இருந்து பெருமாள் மீண்டும் தப்பி ஓடினார். உடனே அவர் மீது அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் நாட்டு வெடிகுண்டை எடுத்து வீசினர்.
ஆனால் அந்த குண்டு சாலையில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரின் மகள் சுவேதா (11) காலில் காயம் ஏற்பட்டது. வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
பொதுமக்கள் திரண்டு வந்ததை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங், கோரிமேடு இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். வெடிகுண்டு சிதறல் விழுந்து காயமடைந்த சிறுமி சுவேதா, தாக்குதலில் காயமடைந்த பெருமாள் ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங்கை முற்றுகையிட்டு இந்த பகுதியில், இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டிச் செல்கின்றனர். எங்கள் பகுதியில் ரவுடிகள், சமூக விரோதிகள் மிரட்டுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற அச்சத்திலேயே இருந்து வருவதாக தெரிவித்து முறையிட்டனர்.
இந்த புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதுடன் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங் உறுதி அளித்தார்.
இதையொட்டி சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் நாய் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதில் சம்பந்தப்பட்ட 2 பேர் போலீசாரிடம் சிக்கி இருப்பதாக தெரிகிறது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். நாட்டு வெடிகுண்டு எங்கு கிடைத்தது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுதொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.