கடையின் சுவரில் துளையிட்டு ரூ.5 லட்சம் செல்போன்கள் கொள்ளை போலீசார் வலைவீச்சு
சோளிங்கரில் செல்போன் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.5 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சோளிங்கர்,
சோளிங்கர் காந்தி ரோட்டில் பெருமாள் கோவில் அருகே செல்போன் கடை ஒன்று உள்ளது. இதனை ஓய்வு பெற்ற ஆசிரியை அரங்கநாயகி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையும் கடை செயல்பட்டது. பின்னர் வேலைநேரம் முடிந்ததும் ஊழியர்களுடன் கடையை பூட்டிவிட்டு அரங்கநாயகி வீட்டிற்கு சென்றார்.
நேற்று காலை கடையை திறந்தபோது மின்விளக்கை போடாமலேயே வெளிச்சம் இருந்ததை பார்த்தபோது சுவரில் துளையிடப்பட்டிருந்ததை கண்டு அரங்கநாயகியும் ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் செல்போன் வைத்திருந்த அலமாரியை பார்த்தபோது அதிலிருந்த விலை உயர்ந்த செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இது குறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காண்டீபன் தலைமையில் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணையை தொடங்கினர்.
அந்த கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் சுவரில் ஆள் நுழையும் அளவுக்கு துளையிட்டுள்ளனர். பின்னர் உள்ளே புகுந்து செல்போன்களை கொள்ளையடித்து விட்டு தப்பியுள்ளனர். கடை ஊழியர்கள் செல்போன்களை சரிபார்த்தபோது ரூ.5 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து துப்பு துலக்குவதற்காக தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடையில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்தனர். அதன்படி பழைய கொள்ளையர்கள் யாரும் இதில் தொடர்புள்ளனரா? என ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி.கேமராவில் மர்மநபர்கள் உருவம் பதிவாகியுள்ளதா? என பார்வையிட்டு அதன் மூலம் கொள்ளையர்களை அடையாளம் கண்டு கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏற்கனவே இதே கடையில் ஒரு முறை கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது.