குடிநீர் கேட்டு பெண்கள் குடங்களுடன் சாலை மறியல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்
குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் ஒன்றியம் சொக்காம்பட்டி கிராம ஊராட்சியில் 3 ஆழ்குழாய்கள் அமைத்து அந்த பகுதி பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படடது. ஆனால் கடந்த 9 மாதங்களாக ஆழ்குழாயின் மோட்டார் இயங்கததால் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் கிராமமக்கள் தண்ணீருக்காக கடும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் ஊருணிக்கு சென்று அதில் உள்ள தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் மோட்டார் பழுது பார்க்கப்படாததால் தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் அலைந்து வந்தனர். மேலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த, சொக்காம்பட்டி கிராம பெண்கள் ஒன்று திரண்டு ஒரு வேனில் காலிகுடங்களுடன் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புறப்பட்டனர். வேன் திருமங்கலம் நகருக்குள் வந்ததும், திடீரென வேனை நிறுத்தி மெயின் ரோட்டில் உள்ள தேவர் சிலை அருகே சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
முற்றுகை
இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த நகர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் சென்று முறையிடுமாறு கூறினர். அதைத்தொடர்ந்து பெண்கள் காலிகுடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோஷமிட்டனர். இதையறிந்து வந்த ஊராட்சி ஆணையாளர் ராஜேந்திரன் முற்றுகையிட்ட பெண்களிடம் பழுதான மோட்டார் உடனடியாக சரிசெய்யப்பட்டு, முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.
இந்த முற்றுகையின் போது ஒரு பெண் கூறியதாவது:- கடந்த 9 மாதமாக குடிநீரை காசு கொடுத்து வாங்கி உபயோகித்து வருகிறோம். மோட்டார் பழுதானதை ஊராட்சி செயலரிடம் கூறினோம். அவர் ஊராட்சியில் பணம் இல்லை என்றார். அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.