பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்கள் ஆர்ப்பாட்டம்

நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-20 11:39 GMT
நாகப்பட்டினம்,

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமை மீட்டெடுப்பு ஆர்ப்பாட்டம் நாகையில் உள்ள ஒரு கல்லூரி முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில தலைவர் ரவிசந்தர் தலைமை தாங்கினார்.

 அரசு மற்றும் அரசு நிதிபெறும் பள்ளிகளில் படிக்கும் வளர் இளம் பருவத்திலுள்ள 15 லட்சம் மாணவிகளுக்கு உடற்கல்வி புறக்கணிக்கப் படுவதை தவிர்க்க வேண்டும்.

புதிதாக தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 ஆசிரியர் பணியிடத்துடன், உடற்கல்வி இயக்குனர் பணியிடத்தையும் சேர்த்து 10 பணியிடமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்