குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
திருவாரூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்ஜோசப் வழங்கினார்.
திருவாரூர்,
திருவாரூர் பஸ் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்ஜோசப் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் அனைவரும் குழந்தைகள் ஆவர். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும். குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும். குழந்தை திருமணத்தை ஒரு போதும் அனுமதிக்க கூடாது. குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்திட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.