ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி அதிக விலைக்கு விற்பனை

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து தடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2017-11-20 10:58 GMT
ஆர்.எஸ்.மங்கலம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் டிராக்டர், லாரிகளில் ஆற்று மணல் அள்ளுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மணல் குவாரிகளும் ஏலம் விடப்படாமல் உள்ளன. இந்த நிலையில் பொதுமக்கள் அவசிய தேவை கருதி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இவ்வாறு ஒரு மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு ரூ.36 மட்டும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த மணலை மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ரூ.1,500-க்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துவருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லையாம். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அதிக விலைக்கு மணல் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்