திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரி, குளங்களில் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களில் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்தார்.
ஊத்துக்கோட்டை,
உலக கழிவறை தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் அம்மம்பாக்கம் ஊராட்சியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் உபாதைகள் பற்றி விளக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் உபாதைகள், கழிவறை பயன்படுத்தினால் ஏற்படும் நண்மைகள் பற்றி கிராமத்தில் உள்ள மாணவ- மாணவிகளிடம் கேள்விகள் கேட்டு விடைகள் பெற்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. எனினும் பல ஏரிகள், குளங்கள் தண்ணீரின்றி காணப்படுகிறது. இதற்கு ஆக்கிரமிப்புகள்தான் காரணம் என்று பல புகார்கள் வந்துள்ளன. இதையொட்டி ஆவடி பகுதியில் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதே போல் மாதவரம் அருகே உள்ள பாலவாயல் பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மேலும் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து விரைவில் அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.