விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அப்ரண்டிஸ் பணி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அமைப்பின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி மையங்களில் ஒன்று ‘விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர்’.
திருவனந்தபுரத்தில் உள்ள இந்த ஆராய்ச்சி மையத்தில் தற்போது பட்டதாரிகளை அப்ரண்டிஸ் பயிற்சிப்பணியில் அமர்த்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 153 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஏரோனாட்டிகல், கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, புரொடக்சன், லைபிரரி அண்ட் இன்பர்மேசன் சயின்ஸ், கேட்டரிங் டெக்னாலஜி, ஓட்டல் மெனேஜ்மென்ட் போன்ற பிரிவுகளில் பயிற்சிப் பணிகள் உள்ளன.
30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. 25-11-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.
பணியிடங்கள் உள்ள பிரிவில் 3 ஆண்டு, 4 ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்பை 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்க்கப்படுகிறார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் website www.sdcentre.org, www.mhrdnats.gov.in ஆகிய இணையதளங்களில் சென்று தங்கள் பெயரை பதிவு செய்துகொண்டு, இதற்கான நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். 25-11-2017-ந் தேதி நேர் காணல் நடக்கிறது. இது பற்றிய விவரங்களை www.vssc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.