மேலூர் அருகே மாட்டு வண்டி பந்தயம்

மேலூர் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் தென் மாவட்டங்களை சேர்ந்த வண்டிகள் பங்கேற்றன .

Update: 2017-11-19 22:30 GMT
மேலூர்,

மேலூர் அருகே வெள்ளலூர் நாட்டு பந்தய மாடு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. அதில் கோட்டநத்தான்பட்டியில் இருந்து சிவகங்கை ரோட்டில் 3 பிரிவுகளாக இந்த போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 5 பரிசுகள் வழங்கப்பட்டன

கோட்டநத்தான்பட்டியில் இருந்து கூட்டுறவுபட்டி வரை நடந்த பெரிய மாடு வண்டி பிரிவில் மொத்தம் 29 வண்டிகள் பங்கேற்றன. இதில் சிவகங்கை மாவட்டம் பொன்குண்டுபட்டி வெள்ளையத்தேவர் வண்டி முதல் பரிசு ரூ.15 ஆயிரத்து 1, திருச்சி மாவட்டம் வெள்ளந்தாங்கிபட்டி செந்தில் பிரகாஷ் வண்டி 2-வது பரிசான ரூ.13 ஆயிரத்து 1, வெள்ளலூர் நிறைஞ்சன்செல்வம் வண்டி 3-வது பரிசு ரூ.11 ஆயிரத்து 1, காரைக்குடி மணிஅம்பலம் வண்டி 4-வது பரிசையும், 5-வது பரிசினை சொக்கநாதபுரம் பாண்டி வண்டியும் பெற்றன.

2 பரிவுகளாக

சின்னமாடு போட்டியில் மொத்தம் 62 வண்டிகள் பங்கேற்றன. இதில் வண்டிகளின் எண்ணிக்கை கூடுதலானதால் தலா 31 வண்டிகளாக பிரித்து, 2 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. அதில் முதல் பிரிவில் நாட்டரன்கோட்டை கார்த்திகேயன் வண்டி முதல் பரிசு ரூ. 5 ஆயிரத்து 1. கணக்கன்பட்டி சந்துரு வண்டி 2-வது பரிசையும், தேனி மாவட்டம் கூடலூர் குப்பத்துராஜாவின் வண்டி 3-வது பரிசையும், மேலூர் வெள்ளரிப்பட்டி சமர்தித் வண்டி 4-வது பரிசையும், சூரக்குண்டு சின்னடைக்கன் நினைவு கார்த்திகேயன் வண்டி 5-வது பரிசையும் பெற்றன.

2-வது பிரிவில் பிள்ளமங்கலம் வாசுதேவனின் வண்டி முதல் பரிசு ரூ.5 ஆயிரத்து 1, சூரக்குண்டு திவாகரின் வண்டி 2-வது பரிசு, உறங்கான்பட்டி மந்தைகருப்பணசாமி வண்டி 3-வது பரிசு, கீழவளவு சக்தி அம்பலம் வண்டி 4-வது பரிசு, மேலூர் அக்கினிபாண்டியின் வண்டி 5-வது பரிசினையும் பெற்றன.

போட்டிகள் நடந்த ரோட்டின் இருபுறமும் ஆயிரக்கணக்கானோர் நின்று மாட்டு வண்டி பந்தயங்களை கண்டு ரசித்தனர். 

மேலும் செய்திகள்