கியாஸ் சிலிண்டர் எரிந்து தீ விபத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

நாட்டறம்பள்ளி அருகே கியாஸ் சிலிண்டர் எரிந்து தீ விபத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்;

Update: 2017-11-19 22:45 GMT
நாட்டறம்பள்ளி,

நாட்டறம்பள்ளியை அடுத்த காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 58), விவசாயி. இவரது மனைவி ஈஸ்வரி (54). இவர்களது மகன் விஜயகுமார் (30). கடந்த 17-ந் தேதி கியாஸ் சிலிண்டரை புதிதாக வாங்கி, அடுப்பில் பொருத்தி சமையல் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பால் காய்ச்சுவதற்காக கியாஸ் அடுப்பை ஈஸ்வரி பற்ற வைத்தார். அப்போது திடீரென ரெகுலேட்டர் வழியாக தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் அந்த தீ அறை முழுவதும் பரவியது. உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வெளியே ஓடி வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த உணவு பொருட்கள், துணி, பீரோ மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சமாகும். மேலும் அறையின் சுவர் முழுவதும் வெப்பத்தால் வெடிப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக சிலிண்டர் வெடிக்காமல் இருந்தது. வெடித்து இருந்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும். 

மேலும் செய்திகள்