மதுரையில் காய்ச்சலுக்கு கர்ப்பிணி உள்பட 3 பேர் சாவு

மதுரையில் காய்ச்சலுக்கு கர்ப்பிணி உள்பட 3 பேர் சாவு

Update: 2017-11-19 22:45 GMT

மதுரை,

மதுரை மாவட்டம், சோழவந்தானை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மீனாட்சி(வயது 27). 9 மாத கர்ப்பிணியான இவர் தொடர் காய்ச்சல் காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவருக்கு ரத்தப்பரிசோதனை செய்ததில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல் திண்டுக்கல்லை சேர்ந்த கண்ணன் மகள் நந்தினி(20). இவர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடற்கரை தெருவை சேர்ந்த ஆரிப்கான் மகள் அசரா பாத்திமா(6) தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தாள். அங்கு அவளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அசரா பாத்திமா சிகிச்சை பலனின்றி இறந்தாள்.

மேலும் செய்திகள்