கல்லப்பாடி கிராமத்தில் ஆக்கிரமிப்பு வீடு, கடைகள் அகற்றம்
கல்லப்பாடி கிராமத்தில் ஆக்கிரமிப்பு வீடு, கடைகளை வருவாய்த்துறையினர் அகற்றினர்.
குடியாத்தம்,
இந்த நிலையில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வேலூர் மாவட்ட கலெக்டர் எஸ்.ஏ.ராமனிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது.ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 8 கடைகள் மற்றும் ஒரு வீடு ஆகியவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
இந்த பணியையொட்டி இன்ஸ்பெக்டர் தீபா, சப்–இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி உள்பட 25–க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.