வேலூர் மாவட்டத்தில் தேசிய திறனறிவு தேர்வை 5,705 பேர் எழுதினர்

அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் 10–ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனறி தேர்வு நேற்று நடந்தது.

Update: 2017-11-18 23:42 GMT

வேலூர்,

அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் 10–ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனறி தேர்வு நேற்று நடந்தது. கல்வி உதவித்தொகைக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வை எழுத வேலூர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 5,884 மாணவ– மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, வேலூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டத்தில் மொத்தம் 21 மையங்களில் தேர்வுகள் நடந்தது. இதில் 5,705 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை பார்வையிட்டார்.


மேலும் செய்திகள்