மந்திரி ரமேஷ்குமாருக்கு திடீர் உடல்நலக்குறைவு பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
சீனிவாசப்பூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது மந்திரி ரமேஷ்குமார் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோலார் தங்கவயல்,
மந்திரி ரமேஷ்குமார், விழா மேடை அருகே வாந்தி எடுத்தார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் சீனிவாசப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெங்களூரு பவுரிங் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.