ரெயில் மோதி 3 பெண்கள் பலி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நேர்ந்த துயரம்
மும்பையில் 3 பெண் ஒப்பந்த தொழிலாளர்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பை,
மும்பை பாந்திராவில் இருந்து நேற்று பாந்திரா - இந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் மதியம் 12 மணியளவில் மலாடு - கோரேகாவ் இடையே சென்றுகொண்டிருந்தது. அப்போது 4 பெண்கள் தண்டவாளத்தை கடந்து கொண்டு இருந்தனர். அவர்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் வருவதை கவனிக்கவில்லை. இந்தநிலையில் வேகமாக சென்று கொண்டு இருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தை கடந்து சென்ற 4 பெண்கள் மீதும் மோதியது. அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.
தகவல் அறிந்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் படுகாயமடைந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.