திருமணத்திற்கு பார்த்த பெண் பிடிக்காததால் பல் டாக்டர் தற்கொலை முயற்சி

திருமணத்திற்கு பார்த்த பெண் பிடிக்காததால் அடையாறு ஆற்றில் குதித்து பல் டாக்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.;

Update: 2017-11-18 22:30 GMT
சென்னை,

தர்மபுரியை சேர்ந்தவர் தாமரைசெல்வன் (வயது 33). தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக உள்ளார். இவரது குடும்பத்தினர் இவருக்கு திருமணம் செய்ய பெண் பார்த்துள்ளனர். அந்த பெண்ணின் புகைப்படத்தை தாமரைசெல்வனிடம் காட்டினர். ஆனால் அவருக்கு அந்த பெண்ணை பிடிக்கவில்லை என தெரிகிறது.

தாமரைசெல்வனுக்கு வயது அதிகமாகி கொண்டே இருப்பதால் அவரது குடும்பத்தினர் அந்த பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால் சில நாட்களாக மனவருத்தத்தில் இருந்து வந்த தாமரைசெல்வன், நேற்று காலை திரு.வி.க. பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்ததும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அருகில் உள்ள மல்லிகை பூ நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கயிறு மூலம் தாமரைசெல்வனை மீட்க போராடினர். இதற்கிடையே அங்கு வந்த போலீசாரும் அவர்களுடன் இணைந்து தாமரைச்செல்வனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்