5 வயது சிறுமியை கற்பழித்த ஆசிரியர் கைது
தானே மாவட்டம், மும்ராவை சேர்ந்த 5 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள மதராசா பள்ளிக்கு அரபி படிக்க சென்றார்.
தானே,
தானே மாவட்டம், மும்ராவை சேர்ந்த 5 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள மதராசா பள்ளிக்கு அரபி படிக்க சென்றார். அங்கு முகமது சிர்டாஜ் ரகுமான் சேக் (வயது 26) என்ற ஆசிரியர் சிறுமியை கற்பழித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறுமி வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறினார். இதுகுறித்து பெற்றோர் விசாரித்த போது, சிறுமி தனக்கு நடந்த அவலத்தை கூறினார். இதுகுறித்து மும்ரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கற்பழித்த மதராசா ஆசிரியர் முகமது சிர்டாஜ் ரகுமான் சேக்கை கைது செய்தனர்.