அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ்கள் மோதல்; 3 பேர் படுகாயம் போக்குவரத்து பாதிப்பு
சுங்கான்கடை அருகே அய்யப்ப பக்தர்கள் சென்ற 2 பஸ்கள் மோதிக்கொண்டன. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
அழகியமண்டபம்,
சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சிலர் 2 பஸ்களில் நேற்று சபரிமலையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டனர். திருவனந்தபுரம் – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கான்கடை அருகே 2 பஸ்களும் சென்றபோது, முன்னால் சென்ற பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதனால், பின்னால் வந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பஸ்மீது மோதியது. இதில் பஸ்களில் இருந்த 3 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும், பலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
காயமடைந்தவர்களை அக்கம் பக்கம் நின்றவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து காரணமாக அந்த வழியாக வேறு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சாலையின் இரண்டு பக்கமும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைதுறை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர். மேலும், 2 பஸ்களும் சேதம் அடைந்ததால், அய்யப்ப பக்தர்கள் மாற்று வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக, அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.