சின்னசேலத்தில் ஸ்கூட்டர் மீது வாகனம் மோதல் மாற்றுத்திறனாளி பலி

சின்னசேலத்தில் ஸ்கூட்டர் மீது வாகனம் மோதிய விபத்தில் 20 அடி உயர பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாற்றுத்திறனாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2017-11-18 21:15 GMT

சின்னசேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெரியேரி மூலக்கரைகாட்டை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 51), மாற்றுத்திறனாளியான இவர் பெரியேரி அ.தி.மு.க.(அம்மா–புரட்சித்தலைவி அம்மா அணி) கிளை செயலாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அம்மாபேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டரில் வந்திருந்தார். பின்னர் அங்கிருந்து பெரியேரிக்கு புறப்பட்டார்.

சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னசேலத்தில் பால் பண்ணை அருகே உள்ள பாலத்தில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அடையாளர் தெரியாத வாகனம் ஒன்று அண்ணாதுரையின் ஸ்கூட்டர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அண்ணாதுரை சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அண்ணாதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்