நெல்லை மணிமண்டபத்தில் வ.உ.சி. சிலைக்கு டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை
சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்ச
நெல்லை,
சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தூத்துக்குடியில் இருந்து நேற்று காலை நெல்லை வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் நெல்லை மணிமண்டபத்தில் உள்ள வ.உ.சி.சிலைக்கு, டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவருக்கு மேள தளங்கள் முழங்க பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ., மாநில மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த் எம்.பி., அமைப்பு செயலாளர்கள் கல்லூர் வேலாயுதம், ஆர்.பி.ஆதித்தன், மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் துணை மேயர் கணேசன், மாநகர் மாவட்ட பொருளாளர் பால்கண்ணன், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் சுரேஷ்குமார், நிர்வாகிகள் செல்வமணி, கொம்பையா, செல்வசேகர், சண்முகம், குருநாதன்பிள்ளை, செல்வராஜ், மாயாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.