தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க.கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், தொம்மை ஏசுவடியான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மேற்கு பகுதி கழக செயலாளர் முருகன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருதாய், ஆழ்வார்திருநகரி நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுடலையாண்டி, டேவிட் பிரபாகரன், கணேஷ், மாநகர தலைவர் முத்துமணி, மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, மாநகர துணை தலைவர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில், வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், மாநகர தலைவர் காங்கிரஸ் எடிசன், மாவட்ட துணை தலைவர்கள் அம்பிகாபதி, ரவிகுமார், மாவட்ட பொருளாளர் பாலசிங், மாவட்ட பொதுச்செயலாளர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சிநாம் தமிழர் கட்சி சார்பில், மண்டல செயலாளர் இசக்கிதுரை தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் பாக்கியராஜ், மத்திய மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துகுமார், மத்திய மாவட்ட தலைவர் அழகு என்ற ஆல்பர்ட், இளைஞரணி துணை செயலாளர் காந்தாரி, ஆசீர், சிவா, அஜெய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் வ.உ.சி. சிலைக்கு மாநில துணை தலைவர் வக்கீல் சொக்கலிங்கம், மாவட்ட தலைவர் வேல்முருகன், செயலாளர் கோமதி நாயகம், செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்து முன்னணிஇந்து முன்னணி சார்பில், மாவட்ட செயலாளர் ராகவேந்திரா தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அம்பேத்கர் ரத்ததான கழக தலைவர் பார்த்திபன், வடக்கு மண்டல இந்து முன்னணி தலைவர் பிரபாகரன், தெற்கு மண்டல துணை தலைவர் பாலா, அய்யப்பன், இசக்கியப்பன், சந்தனகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி பாணர்குல நல அறக்கட்டளை சார்பில், அதன் தலைவர் மாரிராஜ் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கும், மட்டக்கடை பஜாரில் உள்ள வ.உ.சி. சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில பொது செயலாளர் பாபு, அறக்கட்டளை பொருளாளர் வன்னியராஜ், சண்முகம், ரமேஷ், வள்ளிநாயகம், முரளிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.