சேலம் அருகே ஆட்டோ டிரைவர் சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
சேலம் அருகே கும்பலால் தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,
சேலம் அருகே சின்னனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் சசிகுமார் (வயது 27). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர், அப்பகுதியில் இருந்து வீட்டிற்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அவருடன் அவரது சகோதரியின் கணவர் சேகர் என்பவரும் உடனிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த பெரிய வீராணத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (28), மோகன்குமார் (27), மணிவண்ணன் (24), செல்வகணபதி (19) ஆகியோர் சசிகுமாரின் ஆட்டோவை வழிமறித்தனர். பின்னர், அவர்கள் ஆட்டோவில் ஏறி அமர்ந்தனர். பிறகு மதுபோதையில் இருந்ததால் ஆட்டோவில் உங்களை அழைத்து செல்லமாட்டேன் என்றும், இதனால் அனைவரும் கீழே இறங்குங்கள் என்றும் சசிகுமார் கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து கட்டையால் ஆட்டோவை அடித்து நொறுக்கியதோடு, ஆட்டோ டிரைவர் சசிகுமாரையும் சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த அவர் கீழே மயங்கி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உடலில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் சசிகுமார் மயக்க நிலையிலேயே இருந்தார். இதனை தொடர்ந்து சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஆட்டோ டிரைவர் சசிகுமார் திடீரென உயிரிழந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக வீராணம் போலீசார் விசாரணை நடத்தி, சசிகுமாரை தாக்கிய ஸ்டீபன்ராஜ், மோகன்குமார், மணிவண்ணன், செல்வகணபதி ஆகியோரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களில் ஸ்டீபன்ராஜ் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க சசிகுமாரின் சொந்த ஊரான சின்னனூர் காட்டுவளவு பகுதியில் நேற்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சசிகுமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இருப்பினும் சின்னனூர் காட்டுவளவு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேசமயம், சசிகுமார் இறந்துவிட்டதால் தற்போது இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்துபோன சசிகுமாருக்கு கல்பனா என்ற மனைவியும், கீர்த்திவாசன், சூர்யா என்ற 2 மகன்களும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர்.
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கும்பலால் தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் இறந்துபோன சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.