அச்சரப்பாக்கம் அருகே ஆன்லைன் லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
அச்சரப்பாக்கம் அருகே உள்ள இரும்புலி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அச்சரப்பாக்கம்,
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில், துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் மேற்பார்வையில் மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் ஆன்லைன் லாட்டரி சூதாட்டத்தில் யாரும் ஈடுபடுகிறார்களா? என அச்சரப்பாக்கம் அருகே உள்ள இரும்புலி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட சக்திவேல் (வயது 33), வாசுதேவன் (43), முருகன் (26), கோபு (34) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 9 செல்போன்கள், 4 மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்களை அச்சரப்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப்–இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.