கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட கருணாநிதி நகரில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

Update: 2017-11-17 21:00 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட கருணாநிதி நகரில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து வரும் கழிவுநீர் தனியார் ஒருவரின் இடத்துக்குள் சென்றது. இதையடுத்து அவர் கால்வாயை அடைத்து வைத்ததாக தெரிகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி உள்ளதால், கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, கழிவுநீர் வெளியேறும் வகையில் முறையாக கால்வாய் அமைக்கக்கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்களுடன் கமி‌ஷனர் மனோகர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். அதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்