பிளஸ்–2 படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது மற்றொருவர் தப்பி ஓட்டம்

பிளஸ்–2 படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய மற்றொரு போலி டாக்டரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2017-11-16 23:28 GMT

அச்சரப்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் சுந்தர்ராஜன் அச்சரப்பாக்கம், எலப்பாக்கம் மற்றும் ஒரத்தி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது எலப்பாக்கம் பகுதியில் கல்பாக்கம் அருகே உள்ள சூரவடிமங்கலத்தை சேர்ந்த காண்டீபன் (வயது 37) என்பவர் பிளஸ்–2 படித்துவிட்டு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

போலி டாக்டர் காண்டீபன் குறித்து ஒரத்தி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீ.தமிழ்வாணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காண்டீபனை கைது செய்தனர். பின்னர் காண்டீபணை மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அச்சரப்பாக்கம் அடுத்த கடமலைபுத்தூர் ஒரத்தி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (50). பி.எஸ்.சி. படித்துள்ளார். ஆனால் டாக்டருக்கு படித்து இருப்பதாகக்கூறி மருத்துவம் பார்த்ததாக தெரிகிறது.

இதனை அறிந்த போலீசார், பாண்டுரங்கன் நடத்திய கிளினிக்கிற்கு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்