‘பத்மாவதி’ படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்திருக்கும் படம், ‘பத்மாவதி’.
மும்பை,
இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்திருக்கும் படம், ‘பத்மாவதி’. ராஜபுத்திரர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த படம், டிசம்பர் 1–ந் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் வரலாற்றை தவறாக சித்தரித்து இருப்பதாக ராஜபுத்திர சமூகத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக்கும், நடிகை தீபிகா படுகோனேக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால், ‘பத்மாவதி’ படம் திரையிடப்படும் தியேட்டர்களிலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உள்துறை இணை மந்திரி ரஞ்சித் பாட்டீல் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறினார்.