‘பத்மாவதி படத்தை பார்த்த பிறகு முடிவு எடுப்போம்’ நவநிர்மாண் சேனா அறிவிப்பு

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ள படம், ‘பத்மாவதி’. நடிகர்கள் ஷாகித்கபூர், ரண்வீர் சிங் கதாநாயகனாக நடித்திருக்கின்றனர். டிசம்பர் 1–ந் தேதி படம் திரைக்கு வருகிறது.

Update: 2017-11-16 21:55 GMT

மும்பை,

‘பத்மாவதி’ படத்தில் ராஜபுத்திரர்களின் வரலாற்றை தவறாக சித்தரித்து இருப்பதாக ராஜபுத்திர சேவா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிலரும் பத்மாவதி படம் வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், பத்மாவதி ரிலீஸ் ஆவதில், ராஜ்தாக்கரே தலைமையிலான மராட்டிய நவநிர்மாண் சேனா அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கிறது. படம் வெளியானதும் அதனை பார்த்துவிட்டு முடிவு எடுப்போம் என்றும், ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம்பெற்று இருந்தால், இயக்குனர் பன்சாலியிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அக்கட்சியின் திரைப்பட பிரிவு தலைவர் அமி கோப்கர், வீடியோ வாயிலாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்