ரெயில்வே கிராசிங் தடுப்பு வளைவில் சிக்கிய லாரி போக்குவரத்து பாதிப்பு
மார்த்தாண்டம் அருகே ரெயில்வே கிராசிங் தடுப்பு வளைவில் லாரி சிக்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் ரெயில்வே கிராசிங் உள்ளது. ரெயில்வே தண்டவாளத்தில் உயர் அழுத்த மின் வயர்கள் செல்வதால், தண்டவாளத்தின் இருபுறமும் சாலையில் தடுப்பு வளைவுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது. இந்த நிலையில் நேற்று காலை மதுரையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஜவுளி ஏற்றி வந்த லாரிரெயில்வே கிராசிங் தடுப்பு வளைவில் செல்லும் போது சிக்கி நின்றது. இதனால் தடுப்பு வளைவும் சேதம் அடைந்தது.
போக்குவரத்து பாதிப்பு
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தடுப்புகளை அகற்றி லாரியை மீட்டனர். அதன் பின்னர் அந்த பாதையில் போக்குவரத்து சீரானது.