தஞ்சையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-11-16 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட அகில இந்திய ஓய்வூதிய நல சங்கம் (வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டம்-95) சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் நடனசிகாமணி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பாஸ்கரன், மாநில உதவி பொதுச் செயலாளர் வீரமுத்து, மாவட்ட தலைவர்கள் சீனிவாசன், கந்தசாமி, சர்புதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை திருவாரூர் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் மன்னை.மதியழகன் தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் பண்டரிநாதன், என்ஜினீயர் சவுரிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாத ஓய்வூதியம் ரூ.6,500 பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக ரூ.3 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும். ஓய்வூதியர் அனைவருக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி வழங்கப்பட வேண்டும். மூலதன திருப்பத்தொகையை ஓய்வூதியர் மறைவுக்கு பிறகு அவரது வாரிசுக்கு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முடிவில் மாவட்ட துணை செயலாளர் மரியசூசை நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்