கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் சின்ன வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரம்
திருப்பாதிரிப்புலியூரில் சின்னவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இதனை சப்-கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டார்.;
கடலூர்,
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் அணைக்கட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள பாசன நிலங்களின் வடிகால் வாய்க்கால் சின்னவாய்க்காலாகும். இந்த வாய்க்கால், அரிசி பெரியாங்குப்பத்தில் இருந்து தொடங்கி பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம் வழியாக திருப்பாதிரிப்புலியூருக்குள் நுழைந்து, இம்பீரியல் ரோட்டை கடந்து கெடிலம் ஆற்றில் தனது பயணத்தை நிறைவு செய்கிறது.
2.3 கிலோ மீட்டர் நீளத்துக்கு வளைந்து நெளிந்து செல்லும் இந்த வாய்க்காலின் அகலம் ஒரே சீராக இல்லாமல் வெவ்வேறாக உள்ளது. அதாவது அதிகபட்ச அகலம் 55 அடியாகவும், குறைந்த பட்சம் 24 அடியாகவும் உள்ளது.
ஆக்கிரமிப்பு
கிராமப்புறங்களில் சின்னவாய்க்காலில் எவ்வித ஆக்கிரமிப்பும் இல்லை. ஏனெனில் கிராம மக்கள் வடிகால் வாய்க்காலின் அவசியத்தை நன்றாக புரிந்தவர்கள் என்பதால் வாய்க்காலை ஆக்கிரமிக்கவில்லை. ஆனால் கடலூர் நகரில் பேராசைக்காரர்களின் பிடியில் சிக்கி ஆக்கிரமிப்புக்குள்ளாகி சின்னவாய்க்கால் சின்னாபின்னமாகி விட்டது.
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சின்னவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய கட்டாயத்துக்கு மாவட்ட நிர்வாகம் வந்து விட்டது.
அகற்றம்
இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே சின்ன வாய்க்காலை முழுமையாக அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அவரது உத்தரவுப்படி சப்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மேற்பார்வையில் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் வருவாய்த்துறையினரும், நில அளவைத்துறையினரும் கடந்த 1½ மாதமாக சின்னவாய்க்காலை அளந்து, ஆக்கிரமிப்புகளை குறியீடு செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து சின்னவாய்க்காலை மீட்கும் பணியை வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் தொடங்கினார்கள். நேற்று 2-வது நாளாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பொக்லைன் எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. சின்னவாய்க்காலை ஆக்கிரமித்து எழுப்பப்பட்ட சுற்றுச்சுவர்கள் இடித்து தள்ளப்பட்டுதூர்வாரப்பட்டன.
சப்-கலெக்டர் பார்வையிட்டார்
ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலப்பகுதியை மீண்டும் வாய்க்காலாக மாற்றும் பணி நடக்கிறது. இந்த பணியை சப்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேற்று மதியம் பார்வையிட்டார். அப்போது தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
சின்னவாய்க்காலை அபகரித்து வைத்திருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு வாய்க்காலை விரிவாக்கம் செய்வதால், இனிமேல் மழைகாலங்களில் பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்காமல் வடிந்து விடும் என்பதால் வாய்க்கால் கரையோர மக்கள் இப்பணியை வரவேற்றுள்ளனர். ஒரு சிலரின் பேராசையால் மக்கள் அடைந்த அவதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.