காயல்பட்டினம், ஆறுமுகநேரி ரெயில் நிலையங்களில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. ஆய்வு

காயல்பட்டினம், ஆறுமுகநேரி ரெயில் நிலையங்களில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. நேற்று மதியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2017-11-16 20:45 GMT

ஆறுமுகநேரி,

காயல்பட்டினம், ஆறுமுகநேரி ரெயில் நிலையங்களில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. நேற்று மதியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், காயல்பட்டினம், ஆறுமுகநேரி ரெயில் நிலையங்களில் நடைமேடையை உயர்த்தி அமைக்கவும், நடைமேடை முழுவதும் மேற்கூரை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும். ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தில் மற்ற ரெயில் நிலையங்களைப் போன்று காலை 8 மணிக்கு ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை செயலாளர் வாவு சம்சுதீன், துணை தலைவர்கள் தாஜூதீன், எம்.ஏ.ஹசன், பாதுல் அஸ்ஹப், துணை செயலாளர் ஹைலானி, பொருளாளர் ஜெஸ்மீன் கலீல், ஒருங்கிணைப்பாளர் வாவு இஸ்ஸாக், முன்னாள் நகரசபை தலைவி வஹிதா, ஆறுமுகநேரி ரெயில்நிலைய அபிவிருத்தி குழு தலைவர் ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் தங்கமணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்