பிளாஸ்டிக் கடல்
ரோட்டன் தீவுப்பகுதியை சுற்றிஇருக்கும் கடல், பிளாஸ்டிக் கடலாக மாறிவிட்டது.;
ஹோண்டுராஸ் நாட்டிற்கு அருகில் இருக்கும் ரோட்டன் தீவுப்பகுதியை சுற்றிஇருக்கும் கடல், பிளாஸ்டிக் கடலாக மாறிவிட்டது. சமீபத்தில் கவுதமாலா நாட்டில் பெய்த பெருமழை, அங்கிருந்த குப்பைகளை இழுத்து வந்து கடலில் சேர்த்து விட்டதாம். இதனால் நீல நிற கடல், குப்பை கூளங்கள் நிறைந்த பிளாஸ்டிக் கடலாக மாறிவிட்டது.
‘பிளாஸ்டிக் பைகள், முள் கரண்டிகள், கத்திகள், பைகள் என சூரிய ஒளியைக் கடலுக்குள் செல்ல விடாதபடி குப்பைகள் கடலில் மிதக்கின்றன. தற்போது குப்பைகள் பிளாஸ்டிக் துண்டுகளாக மிதக்கின்றன. அதுவே சிறு சிறு துண்டுகளாக உடைந்துவிட்டால், மீன்களும், மிதவை உயிரினங்களும் இவற்றை சாப்பிட நேரிடும். அதனால் கடலின் உணவுச் சங்கிலியே பாதிக்கக்கூடும். அத்துடன் கடல் ஆமை, கடல் பறவைகளின் நிலைமையும் கேள்விக்குறியாகிவிடும். இந்த பிளாஸ்டிக் குப்பைகளை கட்டுப்படுத்தாவிட்டால், கடலே விஷமாக மாறிவிடும்’ என வருத்தப்படுகிறார், இயற்கை ஆர்வலர் ஜான் ஹோர்ஸ்டன்.