திருவள்ளூர் அருகே தண்டவாளத்தில் ஆண் பிணம் யார் அவர்? போலீஸ் விசாரணை
திருவள்ளூர் அருகே தண்டவாளத்தில் ஆண் பிணம் யார் அவர்? போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர்–ஏகாட்டூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் ரெயில்வே சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
விசாரணையில் அந்த நபர், தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது, அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு இறந்து இருப்பது தெரிந்தது. ஆனால் பலியான அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. வெள்ளை, நீல நிறத்தில் கோடு போட்ட லுங்கியும், சிகப்பு நிற அரைக்கை சட்டையும் அணிந்து உள்ளார். இதுபற்றி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.